Tuesday, 2 June 2009
ஹெலிகாப்டர் (சிறுகதை போட்டிக்காக)
அந்த யுத்த பூமியில் ஹெலிகாப்டர் சப்தமும் , குண்டுகள் சப்தமும் ஆச்சர்யமில்லை..
ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர் குட்டியும் அவன் அக்கா நீனுவும். குட்டிக்கு ஹெலிகாப்டர் என்றால் கொள்ளை பிரியம். விளையாடுவதற்கு கூட ஹெலிகாப்டர் பொம்மை தான் வேண்டும் என்று தன் அப்பாவிடம் அடம்பிடிப்பான். ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் உரக்க கத்திக்கொண்டு டாட்டா காமிப்பான்.
குட்டிக்கு எப்படியாவது அந்த ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ..
ஓடிசென்று தன் அம்மா விஜியின் கையை பிடித்து இழுத்தான்..
"அம்மா வாமா அதுல போகலாம்..!"
"அக்கா அத பாருங்களேன், அதுல எனக்கு பறக்கணும் போல இருக்கு, அம்மாகிட்ட சொல்லி என்ன கூட்டிட்டு போக சொல்றயா?
"நீங்க எல்லாம் வரமாட்டிங்க. ! நா அப்பாகிட்ட சொல்லி போய்க்கிறேன்..! அம்மா, அப்பா எப்ப ஊரில் இருந்து வருவாரு சொல்லுமா ?"
விஜியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நேற்றுதான் அவளின் கணவனின் உயிரை எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று துளைத்தது. அதனை நேரில் பார்த்த விஜிக்கு அககனம் உயிரே போய்விட்டது. இங்கு வாழ்வதை விட இறந்து விடலாம் என்று முடிவெடுத்து செல்லும் சமயத்தில் குட்டி, நீனுவின் எதிர்காலம் தடுத்தது!.
தம் மக்கள் எல்லாரும் புலம் பெயருகிறார்கள் என்று அறிந்த பிறகு அவளால் அங்கு இருக்க முடியவில்லை.மனதை கல்லாகிகொண்டு தம் மக்களுடன் தன் மண்ணை விட்டு கிளம்புகிறாள் விஜி.
என்ன செய்வது பிறந்த மண்ணை விட்டு எங்கு சென்று வாழ்ந்தாலும் பிணங்கள் தானே....!
அந்த கடற்கரையில் அமர்ந்திருந்த மக்கள் கடலையே வெறித்து பார்த்துகொண்டிருந்தனர். தன் சொந்தங்களை இழந்து மீதம் இருந்த உயிரை கையில் பிடித்துக்கொண்டு எங்கேயாவது சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று ஏங்கிகொண்டிருண்டிருந்த மக்களின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
தூரத்தில் தெரிந்த படகு ஒன்று அவர்களை நோக்கி வந்தது .
உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரை நோக்கி டாட்ட காட்டிகொண்டிருந்த் குட்டியை படகில் ஏற்றினாள் விஜி.
"அம்மா... அம்மா.. நம்ம அதிலே போக முடியாதா ? ..." ஏக்கத்தோடு கேட்டான் குட்டி.
"இல்லடா செல்லம்..... நம்ம அதுல போக முடியாது, நீ இங்கேயே இரு நான் போய் அக்காவை கூட்டிட்டு வர்றேன்", என்று சொல்லி நீனுவை அழைத்து வந்து படகில் அமரவைத்தாள்.
அமைதியாக புறப்பட்டது படகு அடுத்து நடகவிருக்கும் கொடுமையை அறியாமல்...
சிறிது தூரம் சென்ற பிறகு காற்று பலமாக வீச ஆரம்பித்தது. படகு நீரில் தடுமாற, படகில் இருந்த எல்லாரும் கட்டுபாட்டை இழந்து கடலில் விழ ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்தோ வந்த ஹெலிகாப்ட்டர் ஒன்று அவர்களை நோக்கி பறந்து வந்தது.
விஜி தன் கரங்களில் குட்டியை இறுக்கமாக பிடித்துகொண்டாள்.
"நீனு இங்க பாருமா! அம்மாவை நல்ல பிடிச்சுக்கோ" என்று சொன்ன அடுத்த கனம் அது நடந்தது. படகு முழுவதுமாக கடலில் கவிழ்ந்தது. அதே சமயம் நீரில் தத்தளித்து கொண்டிருந்த விஜியையும், சிலரையும் ஹெலிகப்டேரில் வந்தவர்கள் மீட்டனர்.
விஜியை பிடித்துகொண்டிருந்த குட்டியும், நீனுவும் அங்கு இல்லை. விஜி கதறி அழுதுகொண்டே அருகில் பார்த்த பொது குட்டி ஓரத்தில் நின்றுகொண்டு பயத்தில் நடுங்கிகொண்டிருந்தான். இதை பார்த்த விஜி ஓடி சென்று குட்டியை தழுவிகொண்டாள்.
அதே சமயம் தூரத்தில், நீனுவின் "அம்மா.. அம்மா.. காப்பாத்துமா... " என்ற குரல் கேட்டு துடி துடித்து போனாள் விஜி. அந்த குரல் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது, குரல் மட்டும் அல்ல... நீனுவும் தான்...
கண்முன்னால் தன் மகளை இழந்த விஜி இடிந்து போய் நின்று கொண்டிருந்த சமயத்தில்,
நடந்த விபரீதம் அறியாத குட்டி கை தட்டி கொண்டே உரத்தகுரலில் கடலை நோக்கி கத்தினான்
"அக்கா நாங்க இப்ப ஹெலிகப்டேரில் இருக்கோமே....நீயும் சீக்கிரமா வாக்கா .."
இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Wednesday, 6 May 2009
மனதோடு மழைக்காலம்
எல்லாரும் போல சிவாவும் காலேஜ் போகும் பொது, காலேஜ் படத்துல காட்டுற மாதிரி ஜாலிய இருக்கும்னு நினச்சுகிட்டு வீட்ல இருந்து கிளம்பினான் ..
First day
காலேஜில் எந்த நாளும் சீக்கிரம் வந்தது கிடையாது .. முதல் நாளே லேட்டாக தான் போக முடிஞ்சது..! First hour தமிழ் கிளாஸ்.. நம்ம வாத்தியாரு கொஞ்ச நேரம் ஏற இறங்க பாத்துட்டு சொன்னாரு ..
"மொத நாளே கிளாசுக்கு லேட்ட வர..!"
"sorry சார்..! பஸ் கிடைக்கல சார்..!"
"சரி சரி இப்படி எல்லாம் இனிவந்தா வெளிய தான் நிக்கணும் ..! உள்ள போ..!"
உன்ன போன பிறகு எல்லா பய மூஞ்சிய பாத்த எதோ ஜெயில் ல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருந்தனுங்க..! என்ன பண்றது ..!
பக்கத்துல ஒருத்தன் கேட்டான்
"பாஸ்..! பேனா இருக்கா?"
"இல்ல பாஸ்..! என்கிட்டே ஒன்னு தான் இருக்கு..!"
"இல்ல.. அந்த பொண்ணுக்கு pen வேணுமா..! அதான் கேட்டேன்..!"
"அவங்களுக்கு இருக்கட்டும் ..! மோதல உங்ககிட்ட pen இருக்கா? "
"என்ன பாஸ்.. இப்படி கேட்டுடிங்க.. நாங்கலாம் pen இல்லாம நோட்ஸ் எடுக்கிறவங்க.."
"அது எப்படி பாஸ்..!"
"நாங்க நோட்ஸ் எடுத்தா தான..! நாங்க pennidam தான் நோட்ஸ் புக்ஸ் எல்லாம் வாங்குறோம்..! ஆனா pen வாங்குறது இல்ல..! " என்று ஒரு பெரிய மொக்கை ஒன்று சொல்லி அவனே சிரித்து கொண்டான்.
பிறகு அவன் தொடர்ச்சியாக பல மொக்கை ஜோக்குகளை அள்ளி வீசினான்..
அப்பவே இந்த பெஞ்ச காலி பண்றா னு என் மனசு சொல்லிச்சு .. அவன்தான் சரி மொத நாள் தானேனு இருந்துட்டான்.But இவன் எப்பவும் இப்படி தான் என்று அப்பறமா தான் தெரிஞ்சது அவனுக்கு ..!
மத்தியம் லஞ்ச் பிரேக் …
புது காலேஜ் .. புது ஆளுங்க ..! எவன்கூட சாபிடுறது ..! குழம்பினான் சிவா.
சுற்றும் முற்றும் பார்த்த பொழுது.. அந்த மொக்கை கம்பெனி கிடைக்காமல் அலைந்தது தெரிந்தது..!
"ஆஹா ..! இவன்கிட்ட சிக்குனா சாப்பிட சாப்பட்ட எல்லாம் வெளிய கொண்டுவந்துருவன்.. ஓடிருவோம்..!" என்று ஓட ஆரம்பித்த பொழுது அவன் குரல் கொடுப்பது தெரிந்தது.
"பாஸ்..! வாங்க சாப்பிடுவோம்..!"
"இல்ல பாஸ். நீங்க சாப்பிடுங்க. நான் சாபிட்டாச்சு.. இது காலி tiffen box..!"
"அப்படியா..பரவல.. வாங்க என் tiffen இருக்கு .. ஷேர் பண்ணிக்கலாம் ..!"
"இல்ல பாஸ்..! நான் இன்னைக்கு உண்ணா விரதம்..!" என்று சொல்லி ஓட ஆரம்பித்தான்.
பிறகு மதியம் தூக்கத்திலே கழிந்தது..!
சாயங்காலம் வீட்டுக்கு கிளம்ப நான் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.. அவன் அங்கு வந்தான்..
"நீங்க எந்த ஏரியா ?"
"சுபிரமணிபுரம்"
"நீங்க?"
"அட நீங்க நம்ம ஏரியா வா ?"
"ரொம்ப நல்லதா போச்சு..! அப்பா தினமும் நாம சேர்ந்தே காலேஜ் வந்துருவோம்..! "
(என்னது தினமுமா?..! அட கடவுளே மொத வீட்டுக்கு போன பிறகு அப்பா கிட்ட சொல்லி வீட்ட காலிபன்ன சொல்லணும் ..!)
"இல்ல பாஸ் ..! நான் சீக்கிரம் கிளம்பிருவேன்..!" சிவா சொன்னான்.
"எப்ப கிளபன்னும்னு சொல்லுங்க நான் ரெடியா இருப்பேன்..!"
(சரி இவன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது..!)
"ஓகே..! நாம போகலாம்..!"
"பாஸ் நா நல்ல ஜோக் சொல்லுவேன்..! கேக்குறிங்களா?"
"என்னது ஜோக்கா? நோ..! "
நல்ல வேளை எங்க பாஸ் வந்தது. அவன் முன்னாடி ஏறி கொண்டான் ..!
"ஒரு தெற்கு வாசல் குடுங்க.."
அப்பொழுது ஒரு குரல்
"ப்ளீஸ் .. ப்ளீஸ்.. ஒரு கீழவாசல் வாங்குங்க ,,! ஸ்டாப் வரபோகுது..இந்தாங்க காசு"
அப்பொழுது தான் அவளை பார்த்தான் சிவா..
-தொடரும்
இயற்கையை ரசித்து வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா ?இல்லை என்று யாரும் சொல்ல மாட்டிர்கள்..!
இதோ என் முதல் பிம்பம்.. இந்த இயற்கை கண்ணாடியில்;
"மழை"
"வேற வேல இல்ல இதுக்கு..!.
பொழுது விடிஞ்ச போதும் வந்துருது…" என்று சிலசமயம் புலம்புவார்கள் பலர்.. ஆனால் மழையோ கோவப்பட்டு கொஞ்ச நாள் டாடா காட்டிவிட்டால் "எப்ப பாத்தாலும் வெயில் அடிக்குது ..! மழை பெஞ்ச என்ன..!" என்று புலம்புவார்கள். மனுஷ புத்தி இது தான…! இந்த மழை என் வாழ்கையில் இதுவரை எப்படியெல்லாம் விளையாடுதுனு நா இப்ப எழுத போறேன் ..!
மழையில் நனைந்து வீடு வந்து சேர்ந்த அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். அதுவும் சின்ன வயசுல ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் பொழுதுதான் இப்படி நடக்கும் ..! புத்தகம் எல்லாம் மழைல நனஞ்சு நாஸ்தி ஆயிடும் ..! நான் சின்ன பய்யன இருக்கும் பொழுது இப்படித்தான் ஒரு நாள் நல்ல மழை.. நாளைக்கு chemistry,physics னு எல்லா சார் பயலுகளும் exam வச்சுட்டாங்க . அதுவும் இல்லாம Practical note ரெடி பண்ணனுமம்.ஸ்கூல் முடிஞ்ச பிறகு உடனே வீட்டுக்கு கிளம்பிட்டேன் போற வழியிலே மழை தூர ஆரம்பிச்சுடுச்சு..!சரி எப்படியாவது வீட்டுக்கு போகணும் னு ஓட ஆரம்பிச்சேன் ..! மழை தன்னோட வேலைய காட்ட ஆரபிச்சுருசு. நட ரோட்ல ஓட ஆரம்பிச்சேன் ..! இந்த வண்டி காரங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியாது … நல்லா பள்ளமா பாத்து வண்டிய விடுவாங்க அப்ப அங்க தேங்குன மழை தண்ணி எல்லாம் வர்றவன் போறவன் உடம்புல அடிக்கும் ..இப்படி தான் நானும் பயந்து பயத்து ஓரமா போகும் பொழுது எப்படியோ ஒரு படுபாவி என் மேல தண்ணிய ஊத்திட்டான்..! சரி முழுசா நனஞ்ச பிறகு முக்காடு எதுக்கு னு மழைல நடக்க ஆரபிச்சேன் ..! வீடு வந்து சேரும் பொழுது மணி 6.30 . அடடா எக்ஸாம்கு படிகனுமே னு வேகமா டிரஸ் change பன்னி என் பைய்ய திறந்து பார்தேன் .. ! அட கடவுளே ..! எங்க ஊரு தெப்பகுளத்துல கூட இவ்வளவு தண்ணி நான் பார்த்தது இல்ல ..! தலைல கையா வச்சு உக்காந்துட்டேன் ..! அப்ப என் முதுகுல டமால் னு ஒரு அடி ..! திரும்பி பார்த்த என் அப்பா..! " என்ட இப்படியா மழையில நனஞ்சு வீட்டுக்கு வர்றது ..! இப்ப பாரு புக்ஸ் எல்லாம் என்ன ஆச்சுன்னு ..! புது புக் எல்லாம் வாங்கி குடுக்க முடியாது இத வச்சு படிகிறதுனா படி இல்ல எங்காச்சும் போயி மாடு மேயி ..!"
நான் ஒண்ணும் பேச முடியாமல் books எல்லாம் remove பன்னி காயவச்சு.. அப்பா அப்பப்பா. ..
அப்ப தான் ஒரு அற்புதமான காட்சிய பாத்தேன்.. என் Practical நோட் fulla மழைல நனஞ்சு கிலுஞ்சு போச்சு ..! 15 exercise எழுதி சார் கிட்ட sign வாங்குனது அது ..! நாளைக்கு வேற Practical எக்ஸாம் நான் செத்தேன் ..!
மழை - பகுதி 2
அந்த கிலுஞ்ச practical நோட்டை கொஞ்ச நேரம் பாத்துகிட்டே என்ன பண்றது னு தெரியாம கிறுக்கன் மாதிரி உட்க்காந்து இருந்தேன்..! சரி இப்படியே இருந்த நாளைக்கு உனக்கு ஆப்பு தான் னு மனசு சொல்லிச்சு…. உடனே கடைக்கு போயி ஒரு புது நோட் வாங்கி எல்லா exercise எழுத ஆரம்பிச்சேன்… சரியா ராத்திரி 10 மணிக்கு மேல தான் முடுஞ்சுது…எப்படியோ பழைய நோட் மாதிரி Pack பண்ணிட்டேன் … இப்ப என்ன problem na .. சார் வோட sign என் நோட்ல போடணும்..! எனக்கு போட பயமா இருந்துச்சு…! சரி இப்போ அப்படியே விட்டு நாளைக்கு பாத்துக்குவோம்….. எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிப்போம் னு அந்த புக் எடுத்து படிக்க ஆரபிக்கிறேன் அப்பத்தான் அம்மா டிவி போட்டு சீரியல் பாக்கணுமா.. ! அட கடவுளே ….! 2 மணிநேரம் நா என்ன படிச்சேன் னு எனக்கே தெரியல …!
நல்ல மழை பெஞ்ச பிறகு விடியிற பொழுத பர்த்திருக்கிங்கலா? மண் வாசனவோட சூப்பர் view இருக்கும்…!
காலைல ஸ்கூலுக்கு போன பிறகு எல்லார்ருகிட்ட சொன்னேன்…! அவங்க என்ன பயமுறுத்த ஆரபிசாங்க … " டேய்..! நம்ம Physics சார் பயகரமான ஆளுடா..! நீ இனைக்கு நல்லா வாங்கி கட்டிக்க போற.. ..! "
வழக்கம் போல நம்ம சார் லேட்டா தான் வந்தாரு .. எல்லாரும் அவங்க அவங்க நோட்ட submit பண்ணாங்க… நான் கடைசியா என் நோட்ட சார் முன்னாடி நீட்டினேன்… " சார்..! எ எ என் நோ நோட்டு …. ச ச sign போடுங்க….!"
அப்ப அவன் பார்த்த பார்வை இருக்கே…. எப்பா… நா ஸ்கூல் விட்டு ஓடியே போகலாம்னு இருந்துச்சு…! இந்த சார் பயலுக எப்பவுமே இப்படித்தான்..! என்ன? ஏது? னு கேட்காமலே அடிக்க ஆரம்பிச்சுருவாங்க..!
அப்பறமா அந்த சார் என் தலைல டிரம்ப்ஸ் வாசிச்சது.. குனியா வச்சு என் முதுகுல குத்துனது வேற கதை..!
இப்படித்தான் மழை என்ன வாழ்கையில் என் சின்ன வயசுல சின்ன பிள்ள தனமா விளையாட ஆரம்பிச்சுது…
இந்த மழை என் காலேஜ் life'ல கூட என்ன விடல….! அந்த கதைய அப்பறம் எழுதுகிறேன்…!